டென்மார்க் நகர சபையை நோக்கி நேற்று பெருந்திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து கண்டன ஊர்வலமாக சென்றனர்.
முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியபடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும் இனவழிப்புக்கு உள்ளான தமிழீழ மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பின் பேரணியாக வந்த மக்கள் அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
இதேவேளை டெனிஸ் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட இனவழிப்பு பற்றி எடுத்துக் கூறப்பட்டது.
















