இந்திய மக்கள் காண்பித்திருக்கின்ற உதாரணத்தை இலங்கை மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
10 வருடங்களாக ஆட்டை ஆட்சி செய்த ஊழல் மிக்க அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்த்து வீட்டுக்கு அனுப்புவதற்காக இந்திய மக்கள் எடுத்து முடிவு பாராட்டத்தக்கது. இதுபோல் இலங்கை மக்களுக்கும் ஊழல் மோசடி மிக்க நாட்டை சுரண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை தோற்டிக்க இந்திய மக்களை பின்பற்றி நாட்டை காப்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















