தேவையா இது? : காங்கிரஸை நம்பி காணாமல் போன ‘குலுக்கள்’ நடிகைகள்!

ramya-conசினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல சினிமா நட்சத்திரங்களும் 16-வது பாராளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளனர்.

நடைபெற்று முடிந்த 16-வது பாராளுமன்றத் தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்போடு களமிறங்கிய சினிமா நட்சத்திரங்களில் பலர் வெற்றியைப் பெற்றுள்ளனர். சிலர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.

குறிப்பாக தமிழ்ப்பட ரசிகர்களிடையே பிரபலமான நடிகைகளில் நடிகை ரோஜா மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். ஆந்திராவின் சீமாந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட அவர் 858 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேநேரம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ஜோதிகாவின் அக்காவும், நடிகையுமான நக்மா தோல்வியடைந்தார்.

தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் செகந்திராபத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நடிகை ஜெயசுதா தோல்வியடைந்துள்ளார். அதே மாநிலத்தில் மேடக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆக்‌ஷன் ஹீரோயினாக புகழ் பெற்று விளங்கிய நடிகை விஜய்சாந்தி தோல்வியடைந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கிய ‘சலங்கை ஒலி’ புகழ் நடிகை ஜெயப்பிரதா உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் பாராளுமன்றத் தொகுதியில் ராஷ்ட்ரிய லோக்தளம் சார்பாக போட்டியிட்டு படு தோல்வியடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நடிகை குத்து ரம்யா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காசியாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாப்பர் தோல்வியடைந்தார்.

இதில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் காங்கிரஸ் கட்சியை நம்பிப் போனதாலேயே தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

Tags: , ,

Leave a Reply