வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கென பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பொலிஸ் பாதுகாப்புடனேயே அனந்தி சசிதரன் நேற்று (16) நடந்த வடமாகாண சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார்.
வடமாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமென்று விண்ணப்பிக்க முடியும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தமையடுத்து, அனந்தி சசிதரன் விண்ணப்பம் செய்து மேற்படி பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















