2009ம் ஆண்டு வன்னி-முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இறுதி போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவாக மே 18 ஐ தமிழ் மக்கள் அனைவரும் துயர்நாளாக இன்று 5ஆவது வருடமாக அனுஷ்டிக்க உள்ளனர்.
இன்றைய நாளில் ஆலயங்களில் இறந்தோரின் ஆத்ம சாந்தி வேண்டி வீசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,பொது இடங்கள் சிலவற்றிலும் வீடுகளிலும் தமிழ் மக்கள் தீபங்களை ஏற்றி இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூற உள்ளனர்.
இதேவேளை இறுதிப் போரில் உயரிழந்தவர்களுக்கு நினைவு கூறுவதற்கு வட பகுதி எங்கும் பாதுகாப்புத் தரப்பினரால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மே -18 உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















