பிரபாகரனுக்கு வேண்டுமானால் பிதிர்க் கடனைச் செய்யட்டுமாம்; சொல்கிறார் இராணுவப் பேச்சாளர்

Prabhakaran3தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்காக அவரது உறவினர்கள் இன்று பிதிர்கடன்களை நிறைவேற்ற முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியான புலிக்கொடியுடன் எந்த நிகழ்வும் செய்ய முடியாது என்று இராணுவப் பேச்சாளர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாத்தறையில் நடைபெறும் போர் வெற்றிக் கொண்டாட்டம், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தற்காகவே கொண்டாடப்படுகின்றது. மாறாக ஒரு மக்கள் பிரிவினரை மற்றுமொரு மக்கள் பிரிவினர் தோற்கடித்ததார்கள் என்று அதற்கு அர்த்தமல்ல.

பயங்கரவாதத்தைத் தேற்கடித்ததன் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைத்துள்ளன. வடக்கு, கிழக்கு மக்களின் வெற்றியைத் தான் நாங்கள் கொண்டாடுகின்றோம். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினருக்கும் அழைப்பிதழ்கள் கொடுத்துள்ளோம்.

இதன் காரணமாக அரசியல் ரீதியில் கட்சி அடிப்படையில் அழைப்பிதழ் கொடுப்பதில்லை. அப்படியான செயற்பாடுகளுக்கு இடமில்லை. அழைப்பிதழ் பத்திரம் என்பது பிடியாணை அல்ல.

அழைப்பது எமது கடமை. வருவது அவர்களது பொறுப்பு. பயங்கர வாதிகளைக் கொண்டாடுவதற்கு இடமில்லை என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பிரபாகரனின் உறவினர்கள் இருந்தால் அவர்களது வீட்டில் தானம் கொடுக்க முடியும். அது எங்களது பிரச்சினை இல்லை. அது உறவினர்களின் கொண்டாட்டம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு இடமில்லை. அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் நடை முறையில் உள்ள சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் பிரிவினர் செயற்படுவார்கள் என்றார்.

Tags: ,

Leave a Reply