இலங்கைக்கு மோடி கொடுக்கும் அழுத்தங்கள் இனி பயனளிக்கும் – தயான் ஜயதிலக

dayanஇந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியினால் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் பயன் அளிக்கும் வகையில் இருக்க அதிக வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜ தந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசை மாற்றும் புரட்சியானது நிச்சயம் இலங்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இதுவரை கொடுத்து வந்த அழுத்தங்கள் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் தொடரும்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தைத் தக்கவைத்திருக்க வேண்டு மாயின், காலதாமதம் இன்றி அந்த திருத்தத்தை நடை முறைப்படுத்த வேண்டும்.

இந்தியா கொண்டுள்ள இந்த நிலைமையின் கீழ் 13ஆவது திருத்தச் சட்டம் செயற்படுத்தப் படுவதை இலங்கை தொடர்ந்தும் தாமதித்தால், நண்பன் பகைவனாகக் கூடும்.

நரேந்திர மோடி தலைமையி லான பாரதீய ஜனதா கட்சி இந்து இனத்தை அடிப்படை யாகக் கொண்டு கட்டியயழுப் பட்ட அரசியல் சக்தி என்பதால், புதிய ஆட்சியின் கீழ் இந்தியா முன்னரைவிடப் பலமான இந்து நாடாக எழுச்சி பெறும்.

இதனால் ஏற்படும் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரமல்லாது, இந்தியா நோக்கிய மேற்குலக நாடுகளின் அணுகு முறையிலும் இந்தியா பாகிஸ்தான் உறவுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply