லிங்குசாமி ஆக ஆசைப்படும் இயக்குநர் பாலா

Director-Bala-linguதிரைப்படத்துறையில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே ஒரே லட்சியம்.

இதற்கு இயக்குநர்களும் விதிவிலக்கில்லை.

குறிப்பாக, இந்த விஷயத்தில் இன்றைய இளம் இயக்குநர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

கையில் பத்து பைசா இல்லாவிட்டாலும், தயாநிதி அழகிரியையோ, ஓ.பன்னீர்செல்வத்தையோ, உதயநிதி ஸ்டாலினையோ, கனிமொழியையோ பிடித்து அவர்களின் பணத்தைக் கொண்டு படாதிபதிகளாகிவிடுகிறார்கள்.

பிரபலமானவர்களாக விளங்கும் இவர்களை நம்பி கறுப்புப்பணத்தைக் கொட்ட அரசியல்வாதிகளும் தயாராக இருக்கிறார்கள்.

இளம் இயக்குநர்களில் லிங்குசாமி ஒரு இயக்குநராக சாதித்தாரோ இல்லையோ, தயாரிப்பாளராக செமத்தியாய் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கிறார்.

வெற்றிகரமான தயாரிப்பாளராக வளர்ந்துவிட்ட லிங்குசாமியைப் பார்த்ததும் பல இயக்குநர்களுக்கும் அவர் மீது பொறாமை.

வேறு பலருக்கோ லிங்குசாமிபோல் நாமும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

அவர்களில் இயக்குநர் பாலாவும் ஒருவர் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் மாயாவி என்ற படத்தைத் தயாரித்ததன் மூலம் பி ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தைத் தொடங்கினார் பாலா.

அதன் பிறகு பெயரளவுக்கு செயல்பட்டு வந்த பி ஸ்டுடியோஸ் மூலம் தற்போது முழுமூச்சாக தொடர்ந்து படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பாலா.

சில நாட்களுக்கு முன் மிஷ்கின் இயக்கத்தில், ‘பிசாசு’ என்ற படத்திற்கு பூஜை போட்டார் பாலா..

இப்படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்தைத் தயாரிக்கிறார்.

அவர் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தை ‘நய்யாண்டி’ என்ற தோல்விப்படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார்.

பாலாவின் ‘பரதேசி’ படத்தில் கதாநாயகனாக நடித்த அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Tags: , ,

Leave a Reply