குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை தடுக்க வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் அமெரிக்கா எதனையு;ம் சம்பாதிக்கவில்லை என ஜெனீவாவிற்கான முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதி எலின் டொனவோ (Eileen Donahoe) தெரிவித்துள்ளார். மனித உரிமை கண்காணிப்பகத்தின் சர்வதேச விவகாரப் பணிப்பாளராக எலின் கடமையாற்றி வருகி;ன்றார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணைகளை நடாத்த இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டத் தவறியதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படாது, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாது நிலையான சமாதானத்தையோ நல்லிணக்கத்தையோ நாட்டில் எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவின் உறுப்பு நாடுகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.. சர்வதேச ரீதியான விசாரணைகள் நாட்டுக்கு நன்மையையே ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















