”வாக்கு மூலம்” – முள்ளிவாய்க்காலை முழுமையாகஅனுபவித்த மனித நேய போராளியின் சாட்சியம் இதற்குமூலம்”

mulli-war2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்டதமிழினப்படுகொலையே முள்ளிவாய்க்காலில்அரங்கேறியுள்ளது . இறுதிக்கட்ட யுத்தத்தில்முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். எமதுஉரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணயஉரிமைப்போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள்.அதனால்தான் எமது உரிமைப்போராட்டத்தில் நாம்நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும்மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காதமனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மண்ணில்துடிதுடித்து வீழ்ந்தார்கள். அந்த மகத்தான மனிதர்களின்உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம்.
இன்று எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டுமூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள்.அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்தவர்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும்புதையுண்டுபோனார்கள். எங்கள் புறநானூற்றுச் சான்றுகள்இடித்து வீசப்பட்டன.

முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கிதப்பித்து வாழும் எனது உண்மைக் கதை இது.

ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயப் பகுதியில் நான்ஒரு மனிதநேயப் பணியாளர் ஆவேன். உண்மையில்சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்புவலயங்களிலேயே அரச படையினரின் அதிகளவிலானஎறிகணைவீச்சுக்களும் விமானத்தாக்குதல்களும்இடம்பெற்றன. பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறியதும்இங்குதான்.
சிறிலங்கா அரசினால் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தபோர்த்தவிர்ப்பு வலயமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம்,வள்ளிபுனம், தேவிபுரம், ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன .இந்தப் பிரதேசங்களில் படையினர் அகோரமானஎறிகணைவீச்சுக்களை மேற்கொண்டனர். இதில்சுதந்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசசார்பற்றநிறுவனத்தினர் வழங்கிக்கொண்டிருந்தஉணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக கூடி நின்றபல நூற்றுக்கணக்கான மக்களை இலக்குவைத்து படையினர்மேற்கொண்ட எறிகணை வீச்சில் பல பொதுமக்கள்அவ்விடத்திலேயே கோரமாகப் பலியாகியது இங்குகுறிப்பிடத்தக்கது.
அதேபோல இரண்டாவது தடவையாக அரசு அறிவித்தபோர்த்தவிர்ப்பு வலயமான மாத்தளன் பொக்கணைவலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயேஉலகத்தின் மனச்சாட்சியை உலுக்கக்கூடிய தமிழினப்படுகொலையை அரச படையினர் மேற்கொண்டனர்.

மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள்.

அரச படையினர் கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல்மேற்கொண்டிருந்த வேளையில் அங்கே நான் பணிஆற்றிவந்தேன். மருத்துவமனைகளைக் குறிவைத்து தாக்குதல்நடாத்துவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரானசெயல் என்ற போதிலும் மருத்துவமனைகளை இலக்குவைத்துதாக்குதல் நடத்துவதை இலங்கை இராணுவம் ஒரு போர்உத்தியாகவே கையாண்டது. வன்னியில் யுத்தம் இடம்பெற்றகாலப்பகுதியில் மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்துசென்றபோதெல்லாம் சிறிலங்கா சிங்கள இராணுவத்தினர்முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல்நடத்தினர்.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில்,புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை,வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால்கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பலஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்தன.இதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார்கள். சிறிலங்கா இராணுவத்தினரின்தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டன.மருத்துவமனையை நோக்கி தாக்குதல்கள் தொடர்ச்சியாகஇடம்பெற்றன.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலைவீதியில் அமைந்திருந்தபொன்னம்பலம் மருத்துவமனையில் கடுமையானகாயங்களுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் கால்களுக்குஅன்ரனா மற்றும் மண்மூட்டைகள் போடப்பட்டு படுக்கையாகக்கிடந்தவர்களின் விடுதி மீது 2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம்இரண்டாம்வார காலப்பகுதியில் கிபிர்விமானம் மேற்கொண்டமிலேச்சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதிமுற்றாகச் சிதைவடைந்து சுமார் எழுபதிற்கும்மேற்பட்டவர்கள் பலியாகியதும் அவர்களின் சிதைந்தஉடலங்களை கட்டடஇடிபாடுகளுக்கிடையில் நான்கு ஐந்துநாட்களாக பல சிரமங்களுக்குமத்தியில் மீட்டெடுத்துஅடக்கம் செய்ததுவும் இங்கு நினைவுகூரப்படுவதுஅவசியமானது.
இதே போன்று 2009-ம்ஆண்டு வைகாசி மாதம் முதல்வாரத்தில் முள்ளிவாய்க்கால் மத்தியில் அமைந்திருந்தமுள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயத்தில்செயற்பட்டுக்கொண்டிருந்த பிரதான மருத்துவமனையைஇலக்குவைத்து அரசபடையினர் மேற்கொண்ட சரமாரியானஎறிகணைத் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்துஉயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட பலநூற்றுக்கணக்கானவர்கள் ஸ்தலத்திலேயே துடிதுடித்துப்பலியான துயர்நிறைந்த சம்பவங்களையும் எவரும் எளிதில்மறந்திடமுடியாது. மருத்துவ உதவியாளர்கள் பலர்கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்ததாலும் பாதுகாப்புஅற்ற சூழ்நிலை அங்கு உருவாகியிருந்ததாலும்படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பெரும்சிரமம் எதிர்நோக்கப்பட்டது.

மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களதுபாதுகாப்பையும் கருத்திற்கொள்ளாது அர்ப்பணிப்புடன்செயற்பட்டனர். மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் உடல்கள் காணப்பட்டதால் அப்பகுதி மயான பூமியாககாட்சியளித்தது. இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள்’இயந்திரமனிதர்கள்’ போலவே செயற்பட்டனர். காயமடைந்தமக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சைஅறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர்காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்துசத்திரசிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது ஒரேயொருசத்திரசிகிச்சைக்கூடமே மிகவும் குறைந்த வசதிகளுடன்செயற்பட்டுக்கொண்டிருந்தது.

கொத்துக்குண்டுகள்
கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயேவீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளைசிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக்குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பலசிறிய துண்டுகளாக உடைந்து அனைத்து திசைகளிலும் சீறிபாயும். இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்டகொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக்கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானதுசிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது.சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில்உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளைதொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும்உண்டு.

பொஸ்பரஸ் குண்டு
உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள்மீது பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வகைக்குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும்.அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கேஉள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டுவீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன்பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்குஉள்ளாயினர். பொஸ்பரஸ் குண்டொன்று வீசப்பட்ட போதுஅதன் சுவாலைகள் தற்காலிக கூடாரங்கள் மீது படர்ந்து பின்அங்கிருந்த பலரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால்மிக மோசமான முறையில் எரிகாயங்களுக்கு உள்ளாகினார்.இதனை நான் நேரில் பார்த்தேன். பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்குஉள்ளாகி பலர் இறந்தார்கள்.
மேற்குறித்த கொத்துக் குண்டுகளும் பொஸ்பரசுக்குண்டுகளும் சர்வதேச போர் விதிமுறைகளின்படி தடைசெய்யப்பட்டவையாகும். அத்துடன் யுத்தத்தில்தவிர்க்கப்படவேண்டிய இரசாயனக்குண்டுகளும்பயன்படுத்தப்பட்டதை யுத்தவலயத்திற்குள் அகப்பட்டிருந்தமக்கள் நன்கறிவர்.

எறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள்

இரட்டைவாய்க்கால், அம்பலவன் பொற்கணை, இடைக்காடு,மாத்தளன் பகுதிகளில் எறிகணைதாங்கிகளின் கனரகதுப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்கள்அகோரமாக நடத்தப்பட்டன. கடும் மழை பெய்துவந்தநிலையில் இத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவந்தமையினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிஅவதிப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால், புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்புவலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர்அங்கு வந்து பதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீதுபல் குழல் எறிகணைத் தாக்குதல் மற்றும் எரிவாயு பொஸ்பரஸ்குண்டுகளை வீசிய சிங்களம் கோர கொலை தாண்டவத்தைஆடியது. இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்துஅடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர் .

கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில்இனவெறி தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கானமக்களின் மனித உடலங்கள் முள்ளிவாய்க்காலில்அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் அடக்கம்செய்யப்பட்டன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கு சிக்குண்டுள்ளமக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவ முன்வராதுதங்கள் பாதுகாப்பே முக்கியம் என்பதாக ஒதுங்கிக்கொண்டார்கள். பாவம் மக்கள், தங்களைக்காப்பாற்றிக்கொள்ள தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக்கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

உணவு, குடிநீருக்கு நெருக்கடி

கற்பனையும் செய்ய முடியாத அளவிலான மனிதப்பேரவலத்தைக் காண நேர்ந்தது. எந்த மனிதாபிமானதொண்டு நிறுவனமும் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியாதபாதகமான பாதுகாப்புச் சூழலே உருவாகி இருந்தது . குறுகிய நிலப்பரப்பில் சிக்குண்டுள்ள மக்கள் தமதுகைகளாலேயே பதுங்கு குழிகளைத் தோண்டி அவற்றுக்குள்பாதுகாப்புத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் குடிநீருக்கும் உணவுக்கும் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அந்த மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு சமூகப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பும் தடைப்படாதபோக்குவரத்து வசதியும் இல்லை இப்போதையநிலைமையிலும் மக்களுக்கு தொண்டாற்ற முனைந்த சமூகப்பணியாளர்கள் என்ற வகையில் சாவின் விளிம்பில் இருந்தும் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.

யுத்தம், ஈவு இரக்கமில்லாது கோரப்பசியோடு தமிழ்உறவுகளின் உயிர்களை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரதுவயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள்வேதனை ஒருபுறம், ஆனால் குழந்தைகள் பசி பசி எனகதறிய அழுகைக் குரல் தான் என்னுள் பெரிதும் வலியைஏற்படுத்தியிருந்தது.

கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்ததுசிங்களம்

துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும்இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும்பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிறியகுழி ஒன்றுக்குள் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன் . அரிசிக் கஞ்சி ஊற்றுகின்றஇடத்துக்குச் சென்று வாங்கிய கஞ்சியின் சூடுஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக கூடாரத்துக்குதிரும்பி வந்ததேன்.

பல் குழல் எறிகணை வீச்சில் சிறுவர்கள்சிதையுண்டிருந்தார்கள். காப்பாற்றுவதற்காக நிறையவேபோராடவேண்டியிருந்தது. கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. ஒருவர் தூரத்தே நிற்பதைபார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள்மொய்த்துக் கொண்டிருக்க ஏக்கப்பார்வையோடு அவர் இருந்த கிடங்கின் அருகில் சென்று பார்த்தப்பொழுது அதுஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவேகாட்சியளித்தது. ஆங்காங்கே மனிதச் சடலங்கள் குவிக்கப்பட்டு இருந்தமையினால் நாம் காலடி வைக்கும் பொழுதுகால்கள் இலகுவில் மண்ணுள் புதையுண்டன. சிலகிடங்குகளில் மனிதச் சடலங்கள் அரைகுறையாகஎரியூட்டப்பட்டுக் காட்சியளித்தன.

உக்கிரத் தாக்குதலின் போது தம்மைப் பாதுகாக்க வேண்டிமக்களால் அவசரமாகத் தோண்டப்பட்ட பாதுகாப்புக்கிடங்குகளினுள் அத்தாக்குதலில் கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான மக்களின் சடலங்கள் அங்கேயேபுதைக்கப்பட்டன. தொடர்ந்தும் இழப்புக்களை சந்திக்கமுடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம்சரணடைந்தனர். வெட்டுவாய்க்கால் (வட்டுவாகல்)பாலத்தினைச் சரணடைந்த மக்கள் கடந்துச் சென்றசந்தர்ப்பத்தில் மக்களிலிருந்து போராளிகளைப்பிரித்தெடுத்தனர். எல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம்வருமாறு கூறி, ;அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகுகுடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்த பின்பு,விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம்என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம்சரணடைந்தனர். சரணடைந்தவர்களைப் படையினர்வாகனத்தில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கிவைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாதசிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின்கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர்அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதைகளின்பின்னர் படுக்கொலைச் செய்தார்கள்.
.
மக்களில் கதறல்கள் மற்றும் கெஞ்சல்கள் இராணுவத்தினரின் மனங்களைக் கொஞ்சம் கூடஅசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்ததுபல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைத் காண அலைந்துதிரிந்தார்கள். உடற்காயங்கள, உளக்காயங்கள்என்பவற்றுடன், அன்புக்குரியவர்களைக் காணவில்லை என்பதுஅச்சுருத்த்ளுக்குக் கீழான அடிமை வாழ்வும் மக்களை மேலும்உறுத்தின.

தமிழர்களின் பாரம்பரிய பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்தபூர்விகக் குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்தவெளிச்சிறைக்குள் பணயக் கைதிகளாய் தமிழர்களை சிங்களம்இன்னமும் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைத்திருப்பதும்தமிழர்கள் சொந்த இடங்களிற்கு மீள் திரும்பி சென்றுகுடியேற முடியாத சூழ் நிலை உள்ளது குறிப்பிடதக்கது. பலநிலங்கள் இராணுவத்தினதும் கடற்படையினதும் உல்லாசவிடுதிகளுக்கு என அரசினாலேயே கவரப்பட்டிருப்ப்துஉலகிற்கே இப்போது தெரிந்திருக்கிறது.

இதற்கிடையில், தமிழர்கள் தமது இழந்த உறவுகளுக்காகதுக்கம் கொண்டாட முடியாது என்று இராணுவம்அறிவித்திருக்கிறது. ஆனால், தெற்கில் யுத்த வெற்றிவிழாகொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் பெரும் எடுப்பில்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, புத்த மக்கள்அதிகம் வாழாத தமிழர் பகுதிகளில் வெசாக் தினக்கொண்டாட்டங்களை இராணுவத்தின் முழுமையானஈடுபாட்டுடன் அரசு செய்கிறது. வெசாக் கூடுகளும் புத்தரின்வாழ்க்கைக் கதைகளைக் காட்டும் கொடிகளும்பதாகைகளுமாக இந்த ஏற்பாடுகள் பரபரக்கின்றன. கூடவே,வாழ் ஏந்திய துட்டகைமுனுவின் சிங்கக்கொடிகளும்ஆதிக்கத்தின் அடையாளத்தைக் காட்டி நிற்கின்றன.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்துதமிழர்களும் .அவர்தம் அமைப்புகளும் ஒன்றிணைந்து எமதுதேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் .இதுவரலாற்றுக் கடமை

Tags: ,

Leave a Reply