கமிஷன் காசுக்காக அம்மாவை ஆர்ட்டிஸ்ட் மேனேஜராக்கிய நடிகை!

sri-divya1ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களை கமிட் செய்தால் அந்தப் படங்களுக்கு கால்ஷூட் பிரித்துக் கொடுப்பதே நடிகைகளுக்கு பெரிய மண்டையடியான வேதனை. அந்த பெருங்குடைச்சலுக்காகவே அந்த வேலைகளைப் பார்க்க நடிகைகள் தங்களுக்கென்று தனியாக முரட்டு மேனேஜர்களை வைத்துக் கொள்வார்கள்.

அவர்கள் தான் இன்னைக்கு இந்தப் படத்தோட ஷூட்டிங், இத்தனை மணிக்கு இங்க என்று நடிகைகளுக்கு வழி காட்டுவார்கள். இந்த வேலையைக் கச்சிதமாகப் பார்க்க அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நடிகைகள் (கமிஷனாகவோ அல்லது சம்பளமாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்) கொடுப்பார்கள்.

ஆனால் ஒரு சில நடிகைகளோ அந்த கமிஷன் காசு கூட ஏன் மற்றவர்களுக்கு போக வேண்டும் என்று உஷாராக இருக்கிறார்கள். அதிலும் நடித்து ஒரு படமே ரிலீசான ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா ரொம்பவே தேறிவிட்டார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவரைத் தேடிவந்து அம்மணி ஓயாத பிஸியாட்டம் போட்டாலும் கால்ஷூட் குளறுபடிகளைத் தவிர்க்க மேனேஜர் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. மாறாக கூடவே வரும் தனது சொந்த அம்மாவை கால்ஷூட் மேனேஜராக நியமித்து விட்டார்.

அம்மாவும் பொண்ணு கூட உட்காந்து ஆப்பிள் ஜூஸ் குடிச்ச மாதிரியும் ஆகிப்போச்சு, சம்பளத்தை முழுசா வாங்கின மாதிரியும் ஆகிப்போச்சு என்று ஓ.கே சொல்லி விட்டார்.

Tags: , ,

Leave a Reply