சாரதிகள் குறுந்தகவல் அனுப்புவதை தடுக்க அப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சாதனம்

apple-driveபுதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற அப்பிள் நிறுவனம் சாரதிகள் வாகனத்தை செலுத்தும்போது குறுந்தகவல் அனுப்புவதை தடுக்க புதிய சாதனமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இச்சாதனத்தினை வாகனத்தில் நிறுவி அதற்கான எப்ஸ் ஒன்றினை ஐபோனில் நிறுவுவதன் மூலம் சாரதியால் வாகனத்தை செலுத்திக்கொண்டு குறுந்த தகவல் அனுப்ப முடியாது. இத்திட்டத்தின் உரிமத்தினைப் பெற அப்பிள் நிறுவனம் அமெரிக்க அதிகாரசபையினூடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இச்சாதனமானது வாகனத்தின் வேகத்தினை உணரும் உணரியாக செயற்படும். அத்துடன் வாகனத்தினுள் தொலைபேசியின் சமிக்ஞைகளை தடுப்பதற்கான தொழில்நுட்பம் குறித்த திட்டம் ஒன்றும் இதனுடன் உள்ளடகப்பட்டுள்ளது.

குறித்த உணரியை வாகனத்தினுள்ளும் போனிலும் நிறுவப்படும். இதன் மூலம் வாகனத்தின் வேகத்தினையும் தொலைபேசியை பயன்படுத்தும் நபர் எந்த இடத்தில் அமர்ந்துள்ளார் எனவும் அறிந்துகொள்ளும். ஆனால் பயணிகளால் எதுவித தடையுமின்றி குறுந்தகவல்கள் அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

‘குறுந்தகவல் அனுப்புவது ஒரு பாதிப்பு. இதனை வாகனத்தினுள் இருக்கும்போது கூட தடுப்பது மிகக் கடினம். இத்திட்டம் வெற்றியளிக்குமானால் அது ஒரு மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்’ என வாகன கொள்கைகளின் தலைமை அதிகாரி போல் வோட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply