காணாமல் போனவர்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிதாக இணையத்தளம்

internetworldஇலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு பொது மக்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
www.pcicmp.lk என்ற பெயரில் அந்த இணையத்தளம் நாளை வெளியிடப்பட உள்ளது.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்த இணையத்தளம் ஊடாக ஆணைக்குழுவிற்கு தகவல்களை வழங்க முடியும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அடுத்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

காத்தான்குடியில் அடுத்த மாதம் 6 ஆம் 7 ஆம் திகதிகளிலும் மண்முனைப்பற்று பிரதேசத்தில் 8 ஆம் 9 ஆம் திகதிகளிலும் ஆணைக்குழு கூடி விசாரணைகளை நடத்த உள்ளது.

Tags: , ,

Leave a Reply