கடந்த மாதம் தென்கொரியாவில் ஃபெர்ரி என்ற கப்பல் கடலில் கவிழ்ந்து 300 பள்ளி குழந்தைகள் உள்பட பலர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் முதல் ஆளாக தப்பித்த கப்பலில் கேப்டனின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், உடலை சிறுசிறு துண்டாக வெட்டும் கொடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் வாதாடி வருகிறார்.
தென்கொரியாவில் கொடிய குற்றங்கள் புரிந்தவர்களை உயிரோடு அவர்களில் உடலில் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டும் சித்ரவதை மரண தண்டனையை நடைமுறை பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இந்த தண்டனை 1997ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த குற்றவாளிக்கும் வழங்கப்படவில்லை.
ஆனால் தற்போது இந்த 62 வயது கப்பல் கேப்டனுக்கு இந்த சித்ரவதை தண்டனையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. 300 குழந்தைகள் உள்பட பயணிகள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் இருந்த கப்பல் கேப்டன், முதல் ஆளாக தன்னுடைய உயிரை மட்டும் காப்பாற்றிக்கொண்டு தப்பி வந்ததை தென்கொரிய மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
















