இங்கிலாந்து நாட்டில் நடந்த ஒரு தெரு சண்டையில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று தனியாக சென்ற ஒருவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் இரட்டையராக பிறந்தவர். ஆனால் இந்த இரட்டையர்களில் உண்மையில் யார் குற்றவாளி என்பதை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாததால், இருவரையும் சிறையில் தள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Staffordshire என்ற பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களில் ஒருவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் Ryan மற்றும் Grant Seymour ஆகிய இரட்டையர்களில் ஒருவர். சம்பவத்தன்று ஒருவர் தாக்கியுள்ளார். மற்றொருவர் வேடிக்கை பார்த்துள்ளார். ஆனால் இருவரும் சம்பவ தினத்தன்று நீல நிறத்தில் உடைகள் அணிந்திருந்ததாலும், சிசிடிவி கேமராவின் தெளிவற்ற புகைப்படங்களாலும், குற்றவாளி இருவரில் யார் என்பதை சரியாக போலீஸாரால் நிரூபிக்க முடியவில்லை.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இருவரிடமும் தனித்தனியாக விசாரித்து உண்மையை கூறும்படி கேட்டார். ஆனால் இருவருமே தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறி, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க மறுத்தனர். எனவே வேறு வழியின்றி இருவருக்கும் 9 மாத சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
இந்த அபூர்வ இரட்டை சகோதரர்களின் ஒற்றுமையால் தற்போது இருவரும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
















