பூனைகள் சராசரியாக 12 முதல் 15 வயது வரை உயிர்வாழும் விலங்கினம் ஆகும். ஒருசில வீட்டுப்பூனைகள் 20 வருடங்கள்வரை வாழக்கூடும். ஆனால் 24 வயது வரை உயிரோடு அதுவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் ஒரு பிரிட்டன் பூனை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
Jacqui West என்ற 38 வயது பிரிட்டன் பெண் வளர்த்து வரும் பூனைதான் உலகிலேயே மிக வயதான பூனை என்று கின்னஸ் சான்றிதழ் அளித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்த பூனை பிறந்தது. இந்த பூனை பிறந்த தினத்தில்தான் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என்று கூறுகிறார் Jacqui West.
இந்த பூனை பிறந்த பிறகு, இங்கிலாந்து ஐந்து பிரதமர்கள் மாறியுள்ளனர் என்று பெருமையுடன் கூறும் Jacqui West, தனக்கு இருக்கும் இரண்டு குழந்தைகளோடு இந்த பூனையையும் 3வது குழந்தையாக தான் எண்ணுவதாக கூறினார். இவருக்கு Joe, என்ற 12 வயது மகனும் Toby,என்ற 8, வயது மகனும் உள்ளனர்.
பொதுவாக பூனை 20 வயதுக்கு மேல் உயிர் வாழ்வது அபூர்வம் என்றும், 24 வயதுவரை இந்த பூனை உயிர்வாழ்வது, ஒரு மனிதன் 114 ;வயது வரை உயிர் வாழ்ந்ததற்கு சமம் என்றும், கின்னஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
















