தமிழினப் படுகொலையாளர்கள் 12 பேர் கொண்ட பட்டியலை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். இந்தப் பட்டியலில் உள்ளோர் இனி சர்வதேச நெருக்கடிகளைச் சந்திப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, இந்த தமிழின படுகொலையாளர்கள் பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனே வெளியிட்டுள்ளார்.
தமிழீழத் தேசிய துக்க நாளான மே18ல் வெளிவந்துள்ள இப்பட்டியலில், இனப்படுகொலையாளர்கள் 12 பேருடைய விபரங்கள் முதல்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பகமான ஆதரங்களுடனும், அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்பவும் இந்த 12 நபர்களுடைய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இனவழிப்பாளர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்குத்தான். இவர் இலங்கையின் அதிபர். எப்போதும் முடியாதவாறு பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருக்குமாறு சட்டத்தை மாற்றிக் கொண்டவர்.
கொஞ்ச நாள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க முயலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்காவின் பெயர் இந்தப் பட்டியலில் இரண்டாவதாக இடம்பிடித்துள்ளது.
கோத்தா என்றழைக்கப்படும் கோத்தபாய ராஜபக்சேதான், இந்த இனவழிப்பின் முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டவர். அவர்தான் இந்தப் பட்டியலில் மூன்றாவது குற்றவாளி.
இறுதி யுத்தத்தில் படைகளை நடத்திய தளபதி சரத் பொன்சேகாவை, இனப்படுகொலையாளர்களில் நான்காவதாக பட்டியலிட்டுள்ளனர்.
மே 17 அன்று தமிழ் உயிர்கள் மீது உச்சகட்ட பேரழிவை நிகழ்த்திய கொடும் ராணுவ அதிகாரி. 57வது படைப் பிரிவின் கமாண்டராக இருந்தவர். இப்போதும் முல்லைத்தீவில்தான் கேம்ப் போட்டிருக்கிறார்.
இவர் இறுதி யுத்தத்தின்போது 58 வது படைப் பிரிவை தலைமையேற்று நடத்தியவர். நடேசன், பூலித்தேவனைக் கொன்றவர். இப்போது ஐநாவின் இலங்கைப் பிரதிநிதியாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கிறார்.
இறுதி யுத்தத்தின் போது 59வது படையணியின் ஜெனரல் ஆபீசராக இருந்தவர். இப்போது ரஷ்யாவில் இலங்கைப் பிரதிநியாக சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.
இலங்கையின் 53வது படைப் பிரிவுக்கு தலைமை வகித்து, தமிழர் மீது பாஸ்பரஸ் குண்டு மழைப் பொழிய வைத்தவர். இப்போது பிரேசிலில் இலங்கை பிரதிநிதியாக இருக்கிறார் (ஹெட் ஆஹ் மிஷன் என்ற பெயரில்)
கிழக்கு மற்றும் வடக்கு கடற்படையின் முன்னாள் கமாண்டரான இவர், இறுதி யுத்தத்தில் சிங்கள கப்பல் படைக்குத் தலைமைத் தாங்கினார். ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார்.
சிங்கள ராணுவத்தின் 52வது படையணிக்குத் தலைமை தாங்கியவர் சந்திரசிறி. இப்போது இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக பதவியில் உள்ளார்.
இலங்கையின் கப்பற்படையின் முன்னாள் கமாண்டவர் இவர். இப்போது இருப்பது ஜப்பானில். இலங்கைக்கான ஜப்பான் தூதர் இவர்தான்.
ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவியில் உள்ள இவர், யுத்த காலத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்தின் செயலராக இருந்தவர். அமைதிப் பேச்சுவார்த்தை கமிட்டிக்கும் செயலராக இருந்தவர். இப்போது நியூயார்க்கில் வசிக்கிறார்.
தமிழின அழிப்பாளர்களது பெயர்ப்பட்டியல் தொடர்ந்தும் உரிய ஆவணமாக வெளியிடப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மீது அனைத்துலக அளவிலான பயணத்தடை, சொத்துமுடக்கம் உட்பட அனைத்துலக குற்றவியில் நீதிமன்றங்களில் இவர்களை நிறுத்துவதற்கான செயல்முனைப்புக் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள இப்பட்டியல் உரியமுறையில் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இது முதல் பட்டியல்தான். அடுத்த பட்டியலும் தயாராகி வருகிறது.
















