இலங்கை பிரச்சினைகள் குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வை.கோவிற்கும், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நரேந்திர மோடிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி உறுதியளித்துள்ளார்.
சிறுபான்மையினரை பாதுகாக்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதனை சிறுபான்மை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
















