இலங்கையில் போர் குற்றம் புரிந்தவர்கள்; அமெரிக்காவுக்கு வருகை தர தடை

dirty-dozenஇலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சால் அடையாளம் காணப்படும் எவரும் அமெரிக்காவுக்கு வருகை தருவதன் மீது தடைகளை விதிக்கும்படி அந்தத் திணைக்களத்தைக் கேட்டுக்கொள்ளும் தீர்மான வரைவு ஒன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் ஹோல்ட் தம் சார்பிலும் ஒகையோவைச் சேர்ந்த ஜோன்சன் மற்றும் தேர்னி சார்பிலும் தாக்கல் செய்த இலங்கை தொடர்பான தீர்மான வரைவு வெளியுறவுத்துறைக் குழுவின் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மான வரைவு நீதித்துறைக் குழுவின் கவனத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீதான மேல் நடவடிக்கைகள் சபாநாயகரினால் தீர் மானிக்கப்படும் ஒரு தினத்தில் மேற்கொள்ளப்படும்.

பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மான வரைவில் இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அமெரிக்க முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் அவை குறித்து இலங்கை அரசு அசண்டையாக இருந்து வருவது முதலியவை விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளதுடன் பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தீர்மான வரைவின் இன்னொரு பரிந்துரையில் இலங்கை அரசு அதிக ஊடக சுதந்திரத்துக்கு இடம் தர வேண்டும். பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

மற்றும் போர் முடிவுற்ற நிலையில் நாடு முழுவதிலும் இராணுவ செயற்பாடுகளை அகற்றும் படியும் பொதுமக்கள் விடயங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பானது எல்.ரி.ரி.யுடனான தனது கடந்த கால உறவுகளை அங்கீகரிப்பதுடன் மீள் நல்லிணக்கம் மற்றும் ஒன்றுபட்ட அமைதியான இலங்கையை உறுதிப்படுத்தும் வகையில் நீண்டகால அரசியல் தீர்வுக்கும் உறுதியாகச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் 2011 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான த.தே.கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கும்படி அரசை தீர்மான வரைவு வற்புறுத்துகின்றது.

Tags: , ,

Leave a Reply