மோடியல்ல எவர் வந்தாலும் எமது வரலாற்றை முதன்மைப்படுத்துவோம் : சம்பிக்க

ChampikaRanawakaஇந்­தி­யாவில் நரேந்­திர மோடி அல்ல; எந்­த­வொரு பல­மான அர­சாங்கம் வந்­தாலும் இலங்­கை­யா­னது 10 ஆயிரம் வரு­டங்கள் வர­லாற்றை கொண்ட நாடு என்­ப­தனை முதன்­மை­யாக வெளிக்­காட்­டுவோம் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

நரேந்­திர மோடி இது­வரை வெளி­வி­வ­கார அமைச்­சரை நிய­மிக்­க­வில்லை. வெளி­வி­வ­கார அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டதும் அவர்கள் இலங்கை விவகாரத்தில் முன்­வைக்கும் விடயங்களை வைத்தே எமது பதில்கள் அமையும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள கட்சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரிடம் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­லளிக்­கை­யி­லேயே அவர் மேற் கண்ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,

இந்­தி­யாவின் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்­றி­யீட்டி பிர­த­ம­ராக பத­வி­யேற்­க­வுள்ள நரேந்­திர மோடிக்கு எமது வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம். இந்­தி­யாவில் கடந்­த­கால காங்­கிரஸ் கட்­சியின் ஆட்­சியில் பொரு­ளா­தாரம் 8 வீதத்­துக்கு வந்­தது. இறுதி காலப்­ப­கு­தியில் 5.5 வீத­மாக பதி­வா­கி­யது. மேலும் பல்­வேறு பிர­தே­சங்­களை காங்­கிரஸ் அர­சாங்கம் சிறப்­பாக அபி­வி­ரு­ததி செய்­தது. ஆனால் ஊழல் மோசடி கார­ண­மாக அந்தக் கட்சி இம்­முறை தோல்­வி­ய­டைந்­துள்­ளது.

மேலும் தொகுதி முறை தேர்தல் கார­ண­மா­கவே மோடி தலை­மை­யி­லான கட்சி இவ்­வா­றான பாரிய வெற்­றியை பெற்­றுள்­ளது. பிர­தேச வாரி தேர்தல் முறை­யாக இருந்­தி­ருந்தால் மோடிக்கு 206 ஆச­னங்­களே கிடைத்­தி­ருக்கும் என்­ப­த­னையும் இந்த இடத்தில் குறிப்­பி­டு­கின்றோம்.

நரேந்­திர மோடி இது­வரை வெளி­வி­வ­கார அமைச்­சரை நிய­மிக்­க­வில்லை. வெளி­வி­வ­கார அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டதும் அவர்
கள் இலங்கை விவகாரத்தில் முன்வைக்கும் விடயங்களை வைத்தே எமது பதில்கள்அமையும்.

ஆனால் இந்­தி­யாவில் நரேந்திர மோடி தலைமையிலான பலமான அரசு அல்ல, எந்தவொரு பலமான அரசாங்கம் வந்தாலும் இலங்கையானது 10 ஆயிரம் வருடங்கள் வரலா
ற்றை கொண்ட நாடு என்பதனை முதன்மையாக வெளிக்காட்டுவோம்.

Tags: , ,

Leave a Reply