எனக்குள் ஒருவன், இதுநம்ம ஆளு போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஷோபனா, ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சொந்தமாக பரத நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் பல பிரபலங்கள் பரதநாட்டியம் கற்றுள்ளனர்.
கோச்சடையான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஷோபனா, சமீபத்தில் ஒரு திடுக்கிடும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஷோபனா பரதநாட்டியத்தில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாகவும், மீண்டும் சினிமா வாய்ப்பை தேடுவது மற்றும் ஓய்வு நேரங்களில் குடும்பத்தினர்களுடன் சந்தோஷமாக பொழுதை போக்குவது என முடிவு செய்துள்ளாராம். இதனால் அவருடைய பரதநாட்டிய பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடப்போவதாக கூறும் ஷோபனா, சினிமாவிலும் பரதநாட்டிய கேரக்டர் வந்தால் ஏற்க மாட்டேன் என கூறுகிறார். ஷோபனாவின் முடிவுக்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை அவர் கோச்சடையான் படத்திற்கு பின்னர் எடுத்துள்ளதாக தெரிகிறது.
















