அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் தடுப்பதால் கறுப்புப்பட்டிகளை அணிந்து கண்டிக்கின்றோம் : முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

c.vஎங்­க­ளு­டைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்­பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­து­கின்ற பொழுது அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாகப் பார்ப்­ப­தையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தையும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

இதே­வேளை நாம் வெளியில்ஒன்று கூடினால் அதற்கு அர­சாங்­கமும் இரா­ணு­வமும் தடை விதிக்­கின்­றது. இதனால் நாம் இக்­க­றுப்­புப்­பட்­டி­களை அணிந்­துள்ளோம் என
வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­கினேஸ்­வரன் தெரி­வித்தார்.

வடக்கு மாகாண சபையின் ஒன்­ப­தாவு அமர்வு நேற்று நடை­பெற்­ற­போது முள்­ளி­வாய்க்­காலில் உயி­ரி­ழந்த மக்­க­ளுக்கு கறுப்­புப்­பட்டி அணிந்து அஞ்­சலி செலுத்­திய பின்
னர் அவைத் தலை­வரின் அழைப்­புக்கு அமைய இம்­மக்­க­ளுக்­கான அஞ்­சலி உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு உரை­யாற்­று­கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயிர் நீத்­தார்கள். எத்­த­னையோ பேர் எப்­பொ­ழுதுஇ எதற்­காகஇ எப்­படி என்­பது சம்­பந்­த­மாக சர்­வ­தேசம் விசா­ரணை செய்ய இருக்­கின்­றது. அது ஒரு­பு­ற­மி­ருக்க எங்­களைப் பொறுத்­த­வ­ரை­யிலே எங்­க­ளு­டைய உற­வுகள் திடீரென பெரு­வா­ரி­யாக அன்று உயிர்­நீத்­ததை நாங்கள் நினைவு படுத்­தியே எங்­க­ளு­டைய அஞ்­ச­லி­க­ளையும் மனத் துய­ரங்­க­ளையும் மன­வ­ருத்­தங்­க­ளையும் தெரி­வித்து அந்த ஆத்­மாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த வேண்டும் என்­ப­தற்­காக தீபங்கள் ஏற்­றியும் எமது எண்­ணங்­களை வெளிப்­ப­டுத்­தியும் வரு­கின்றோம்.

இது சம்­பந்­த­மாக அண்­மைக்­கா­லத்தில் பல முரண்­பட்ட கருத்­துக்கள் எழுந்­துள்­ளன. இதில் விசித்­திரம் என்­ன­வென்றால் இறந்­த­வர்­க­ளுக்­காக எங்­க­ளு­டைய மன நிலையை வெளிப்­ப­டுத்­து­வதை அர­சாங்கம் வித்­தி­யா­ச­மாக எடுத்துக் கொள்­கின்­றது. இறந்­த­வர்கள் மீண்டும் வந்து விடு­வார்கள் என்று பயத்­திலோ என்­னவோ இரா­ணு­வமும் அர­சாங்­கமும் நாங்கள் எங்­கெல்லாம் தீபம் ஏற்­று­கின்­றோமோ அங்­கெல்லாம் வந்து அவற்றை அணைப்­பதும்இ அது சம்­பந்­த­மாக மக்­களைக் கைது செய்து செல்­வதும் தற்­பொ­ழுது சில நாட்­க­ளாக நடை­பெற்று வரு­கின்­றன.

இது ஒரு­தே­வை­யற்ற விட­ய­மாகும். இறந்­த­வர்கள் தொடர்­பாக எங்­க­ளு­டைய மனோ­நி­லை­யையே நாம் வெளிப்­ப­டுத்­து­கின்றோம். அதை ஒரு அர­சியல் விட­ய­மாக மாற்றிக் கொள்­வது அவ்­வ­ளவு சரி­யில்லை என்றே எனக்­குப்­ப­டு­கின்­றது. அதே நேரத்தில் ஆலயங்களில் நாங்கள் ஏற்ற வேண்­டிய தீபங்­களை அர­சியல் அரங்­கங்­க­ளுக்குக் கொண்டு வந்து தீபங்கள் ஏற்ற வேண்டும் என்ற அவ­சி­யமும் இல்லை எனவும் நாம் கரு­து­கின்றோம். எங்­களு­டைய மனோ நிலை­களை நாங்கள் இறந்த­வர்கள் சம்­பந்­த­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தா
னால் பல விதங்­களில் அதைச் செய்­யலாம்.

ஆல­யங்­க­ளுக்குச் செல்­லலாம். பூசைகள் செய்­யலாம். அதே­நேரம் அவர்கள் சார்­பாக வறி­ய­வர்­க­ளுக்கும்இபோரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் உத­வி­களை வழங்­கலாம்.
தற்­பொ­ழுது வலி.வடக்கு மக்கள் இடம்­பெ­யர்ந்து மிகவும் கஷ்­ட­மான நிலையில் இருக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் எந்­த­வ­கை­யான உத­வி­களும் தரப்­ப­ட­வில்லை. வழங்­கப்­பட்ட உத­வி­க­ளையும் அவர்கள் தடை­போட்டு நிறுத்­தி­விட்­டார்கள்.

அம் மக்­க­ளுக்கு மிக அண்­மை­யிலே நாம் உத­வி­களைச் செய்­துள்ளோம். இறந்­த­வர்கள் தொடர்பில் எமது மன­நி­லையை வெளிப்­ப­டுத்த இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு உத­வி­களை வழங்
கலாம். அதை விடுத்து இவற்றை அர­சி­ய­லுக்குப் பாவிப்­பது அவ்­வ­ளவு சரி­யா­ன­தாக எனக்குத் தெரி­ய­வில்லை. அதற்­காக எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­தா­மலும் இரு
க்­க­மு­டி­யாது.

ஆயி­ர­மா­யிரம் மக்கள் ஒரு­மித்து ஓரிரு நாட்­க­ளி­லேயே இறந்து போவ­தற்கு காரணம் என்­ன­வென அர­சியல் ரீதி­யாக வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் அறிந்து எமக்குத் தெரி­விக்க இரு­கின்­றார்கள். அது எவ்­வாறு இருப்­பினும் மக்­க­ளு­டைய மனோ நிலையை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யமும் இருக்­கின்­றது.

வெளியில் நாங்கள் கூடினால் அதற்கு அர­சாங்கம் தடை விதிக்­கின்­றது. இரா­ணுவம் தடை விதிக்­கின்­றது. அதனால் தான் நாங்கள் இன்று இக்­க­றுப்புப் பட்­டி­களை அணிந்துஇ மிகவும் மன­வே­தனையை வெளிப்­ப­டுத்­து­கின்றோம்.

அதா­வது எமது இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்­பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­து­வதை அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாகப் பார்ப்­ப­தையும் அர­சாங்கம் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தையும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம் என்ற அடிப்­ப­டை­யி­லேதான் நாம் இன்று கறுப்­புப்­பட்டி அணிந்து இங்கு வந்­துள்ளோம். எல்லோர் சார்­பா­கவும் இந்த மனோ நிலையை நாம் வெளிப்படுத்தி நிற்கின்றோம் என்றார்.

Tags: , ,

Leave a Reply