ராஜபக்சே அழைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காக்கும் விஜயகாந்த், ராமதாஸ். தமிழக மக்கள் அதிருப்தி

mahintha-vijayakanthநரேந்திரமோடி பிரதமர் பதவியேற்கும் விழாவுக்கு தமிழர்களின் எதிரியான இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை கண்டித்து தமிழக தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒருசில தலைவர்கள் தங்கள் சுயலாபம் கருதி எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்து வருவதால் அவர்களுடைய சுயரூபம் வெளிப்பட்டுள்ளதாக பரவலாக கூறபடுகிறது.

மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபருக்கு அழைப்பு கொடுத்ததை ஒட்டி முதலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை ஒன்றை விடுத்தார். அதன்பின்னர் முதல்வர் ஜெயலலிதா காட்டமான ஒரு அறிக்கையை விட்டுள்ளார். தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக பாஜக அரசின் முதல் நடவடிக்கையே இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் திமுக, கம்யூனிஸ்ட், மற்றும் திராவிடர் கழகம், நாம் தமிழர் போன்ற அமைப்புகள் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுவித்த விவகாரத்தை கடுமையாக கண்டித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஆகிய இருவர் மட்டும் மெளனம் காத்து வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக மக்கள் கருதுகின்றனர்.

பாஜக அமைச்சரவையில் தனது மச்சானுக்கு அமைச்சர் பதவி கேட்டுள்ள விஜயகாந்த், மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டுள்ள ராமதாஸ் ஆகிய இருவரும் தங்களுடைய சுய லாபத்திற்காக தமிழர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரின் மீதும் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னரும் இவர்கள் இருவரும் அமைதி காத்து வருவது ஆச்சரியமாக உள்ளது. ராஜபக் ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதிய ஜனதாவின் மேலிடத் தலைவர்களின் அதிருப்தியை சம்பாதித்து கொள்ள வேண்டாம் என, இருகட்சிகளின் தலைமைகளும் கணக்கு போடுவதாக தெரிகிறது.

Tags: , , ,

Leave a Reply