அமெரிக்காவை சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர் நேபாள நாட்டின் இமயமலை பகுதியில் பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கி ஆறுமணி நேரம் உயிருக்கு போராடி உள்ளார். அவரை நேபாள நாட்டு மீட்புப்படையினர் பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் Western Kentucky University என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த John All என்ற மலையேறும் பயிற்சி பெற்ற வீரர் நேற்று காலை நேபாள நாட்டின் இமயமலை பகுதியில் மலையேறினார். அப்போது எதிர்பாராத வகையில் 22 மீட்டர் ஆழமுள்ள ஒரு பொந்தில் சிக்கிக்கொண்டார். கை மற்றும் கால்களில் எலும்புகள் உடைந்து உருக்குலைந்த கிடந்த அவர் ஆறு மணிநேரத்திற்கு பின்னர் மீட்புப்படையினர்களின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டார்.
தான் உயிரோடு மீட்கப்படுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்றும், கூறினார்.
கடந்த மாதம் 16 மலையேறும் வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும்போது ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்ததால், நேபாள அரசு எவரெஸ் சிகரத்திற்கு செல்லும் வழியை மூடிவிட்டது. இதனால் John All, மற்றும் அவரது குழுவினர் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள Mount Lhotse என்ற மற்றொரு சிகரத்தில் ஏற முயற்சித்தனர். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
















