ஒரே பெண்ணை 6 முறை திருமணம் செய்து 6 முறை விவாகரத்து பெற்று உலக சாதனை செய்த ரோமானிய தொழிலதிபர்.

6-mariedரோமானிய நாட்டு தொழிலதிபர் ஒருவர் ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து சாதனை புரிந்துள்ளார். அவர் இதுவரை ஒரே பெண்ணை ஆறு முறை திருமணம் செய்து ஆறு முறை விவாகரத்தும் செய்துள்ளார். தற்போது மீண்டும் அவர்களிடத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மீண்டும் பிரிந்துள்ளனர்.

ரோமானிய நாட்டு தொழிலதிபரான 50 வயது Silviu Prigoana தனது 39 வயது மனைவி Adriana Bahmuteanu என்பவரை ஆறு முறை திருமணம் செய்து ஆறு முறை விவாகரத்து செய்துள்ளார். ஒரு கால் இல்லாத இவர் ஒரே பெண்ணை ஆறு முறை திருமணம் மற்றும் விவாகரத்து செய்தது உலக சாதனையாக கருதபடுகிறது. தற்போது ஏழாவது முறையாக அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். ஆனால் சில நாட்களில் மீண்டும் தனது மனைவியை ஏழாவது முறையாக திருமணம் செய்வார் என அவரது உறவினர்களும் நண்பர்களும் கூறுகின்றனர்.

ஓவ்வொரு முறை விவாகரத்து செய்யும்போது அவர் சொல்லும் காரணம், தனது மனைவி தன்னுடன் செக்ஸ் உறவு கொள்ள மறுக்கிறார் என்றும், தனக்கென ஒரு குழந்தை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை என்றே கூறியுள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட பொலியோ நோய் தாக்குதலால் தனது ஒரு காலை இழந்தாலும், தனது மனைவிக்கு ராஜமரியாதை கொடுத்து வந்ததாக அவர் கூறினார். பத்தாயிரம் யூரோ மதிப்பிற்கு தனது மனைவிக்கு பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளதாகவும் அதிலிருந்தே தனது மனைவியின் மேல் தான் வைத்துள்ள அன்பை புரிந்துகொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தன்னை பல பெண்கள் விரும்பி திருமணம் செய்ய வருகிறார்கள் என்றும் ஆனால் தனக்கு Adriana Bahmuteanu மேல் மட்டுமே காதல் வருகிறது என்று அவர் ஏழாவது முறையாக விவாகரத்துக்கு மனுகொடுத்த பின்னர் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply