யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் இராசகுமாரனுக்கும் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன எனப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என புதிய விளக்கம் அளித்துள்ளார் யாழ். மாவட்ட இராணுவத்தளபதி உதயபெரேரா.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டமைக்கும், யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதனிடையே யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நேற்று (21.05.14) புதன்கிழமை நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூர்ந்தே முன்னெடுக்கப்பட்டது.
அதனாலேயே தாங்கள் அதனைத் தடுக்கவில்லை என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
















