தமது கைத்தொலைபேசியில் தமிழீழப் புரட்சிப் பாடல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்.குருநகரைச் சேர்ந்த 04 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமை யாழ்.முனியப்பர் கோயிலடியில் தமிழீழ புரட்சிப்பாடல்களை தமது கைத்தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைத்தொலைபேசியில் புரட்சிப் பாடல்களைப் பதிவு செய்து கொடுத்த குருநகரைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தொலைத் தொடர்பு நிலையத்தில் இருந்த கணனி உட்படப் பல உபகரணங்களைப் பொலிஸார் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்கின்றனர்.
















