22.05.2014 நடந்த மாகாணசபை அமர்வில் முக்கிய விடயங்களை தவிர்த்து உலக மலேரியா தின அழைப்பிதல், மக்களால் வழங்கப்பட்ட மகஜர்களை அவையில் வாசிக்க தொடங்கினார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம். அங்கே குறிக்கிட்ட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பொது சுகாதார பரிசோதகர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான சரமாரியான கேள்விகளையும் கண்டங்களையும் தெரியப்படுத்தினார்.
இறுதியாக இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாதவிடத்து சுகாதார அமைச்சரின் அலுவலகம் முன் மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடாத்தப்படும் என எச்சரித்தார் சிவாஜிலிங்கம்.
பொது சகாதார பரிசோதகர்கள் பிரச்சினையை வெளிப்படுத்தவிடாது தடுத்த தவிசாளர்
சித்திரை மாத மாகாணசபை அமர்வில் மேற்படி விடயம் சம்பந்தமாக பல மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வியெழுப்பவிருந்த சமயத்தில் 2 நாட்களுக்குள் தீர்ந்து விடும், முடிவிற்கு கொண்டு வந்து விடுவோம் எனக் கூறி சுகாதார அமைச்சரை காப்பாற்றியதன் பின் இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தது கேள்விக்கணைகள்,
தொடர்ந்து உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் சுருக்கமாக சுகாதார அமைச்சரிடம் சில கேள்விகளை முன் வைத்தார்.
1. சுகாதார பரிசோதகர்களுக்கெதிராக ஆரம்பத்தில் பொலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்க முற்பட்டது யார்?
2. சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பையும் உள்ளடக்கி ஒருமித்த கலந்துரையாடல் செய்யாது தனித்தனியாக கலந்துரையாடி பிரச்சினையை இழுத்தடிப்பு செய்தது ஏன்?
3. முறைப்படியான கோரல் முறையில் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட பிரதேச சபைகளுக்கு தற்சமயம் ஆளனி வெற்றிடம் இல்லை என்று கூறி ஏன் பிரச்சினைகளை வளர்க்கிறீர்கள்?
4. பொது சுகாதார பரிசோதகர்களின் சம்பளம் நிற்பாட்ட முற்படுவதாகவும் அதுசம்பந்தமாக ஆளுனருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டவர்கள் யார்?
என்றும் கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் நீண்டதொரு கதாபிரசங்கம் நிகழ்த்தினார். சலித்துக்கொண்ட அவை தலைவர் அவர்கள் தேனீர் குடித்துவிட்டு வந்து கதைப்போம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
இறுதியில் ஒரு பொது சபை அமைத்து பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அவையால் தீர்மானிக்கப்பட்டது.
இதை பற்றி ஒரு பொதுமகனை அனுகிய போது,
பேச்சு வார்த்தைகள் நடாத்த இது என்ன இனப்பிரச்சனையா? எமது மக்களின் அன்றாட வாழ்க்கைப்பிரச்சனை, எத்தனை நாட்களுக்கு புழுப்பிடித்த மாட்டு இறைச்சியையும், புழுப்பிடித்த மீனையும் வேண்டி உண்பது, என ஒரு பொது மகன் குமுறுகின்றார். கவனிப்பாரா! சுகாதாரா அமைச்சர்.
















