மோடி அர­சாங்கம் இலங்­கையின் பிரி­வி­னைக்கு மூன்று மடங்கு உதவும் : தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்

Wasantha-Bandaraஇந்­தி­யாவின் மோடியின் அர­சாங்கம் இலங்கையின் பிரி­வினை வாதத்­திற்கு ஜெய­ல­லி­தாவை விட மும்­ம­டங்கு துணை போகும். எனவே, அர­சாங்கம் தப்புக் கணக்கு போடக்­கூ­டாது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார தெரி­வித்தார்.

மோடி அர­சாங்­கத்­துடன் இலங்கை அர­சாங்கம் ராஜ­தந்­திர நட்­பு­றவை மேம்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென்றும் அவர் கூறினார்.

இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,

மோடியின் அர­சாங்கம் பெரும்­பான்மை பலம் கொண்ட அர­சாங்­க­மாகும். எனவேஇ ஜெய­ல­லி­தாவின் ஆத­ரவு அவ­சி­ய­மில்­லை­என்­பது உண்மை.
ஆனால், தமிழ் நாட்டில் பெரும்­பான்மை பெற்ற ஜெய­ல­லி­தாவின் பலத்தை உடைப்­ப­தற்கும் பார­தீய ஜனதா கட்­சியின் ஆளு­மையை தமிழ்நாட்டில் நிலை நிறுத்­து­வ­தற்கும் மோடியின் அர­சாங்கம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கும்.

இது இல­கு­வாக அமையும். இந்­துத்­துவ தீவி­ர­வாத கொள்­கையை தமிழ்நாட்டு மக்கள் ஆத­ரிப்­பார்கள். அத்­தோடு வைகோ போன்ற பிரி­வினை வாத புலி ஆதர­வா­ளர்­களின் உத­வியும் மோடிக்கு கிடைக்கும். எனவே தமிழ்நாட்டில் பார­தீய ஜனதா கட்­சியின் அதி­கா­ரத்தை நிலை நாட்­டு­வ­தற்­காக மோடியின் அர­சாங்கம் ஜெய­ல­லி­தாவை விட
மும்­ம­டங்கு இலங்­கையில் பிரி­வினை வாதத்திற்கு துணை போகும்.

எனவே, அர­சாங்கம் ஜெய­ல­லி­தாவின் அழுத்தம் மோடிக்கு இல்­லை­யென்­பதால் இலங்­கைக்கு பிரச்­சினை இல்­லை­யென தப்புக் கணக்கு போடக்­கூ­டாது.
மோடியின் பத­வி­யேற்பு வைப­வத்தில் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்­வது நல்­லது. இவ்­வி­ஜ­யத்தை நன்கு பயன்­ப­டுத்திக் கொண்டு மோடியின் அர­சாங்­கத்­து­ட­னான ராஜ­தந்­திர நட்­பு­றவை வலுப்­ப­டுத்திக் கொள்வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க வேண்­டு­மென்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply