ஜப்பான் டிசைனர் அறிமுகப்படுத்தியுள்ள மார்பக டீ-சர்ட். இளம்பெண்கள் இடையே பெரும் வரவேற்பு.

t-shirtஇளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், சில மருத்துவ சிகிச்சைகள் அல்லது சர்ஜரி செய்வதுண்டு. தங்களை கவர்ச்சியாக வெளியே காட்டிக்கொள்ள பெண்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் ஜப்பானிய டிசைனர் ஒருவர் தயாரித்த டீ-சர்ட், அதற்கு தேவயில்லாமல் செய்துவிட்டது.

இவர் விதவிதமான டிசைன்களில் மற்றும் கலர்களில் மார்பக படங்களுடன் கூடிய டீ-சர்ட்டுக்கள் தயாரித்துள்ளார். இதை அணிந்துகொண்டால் டிசைனிங் மார்பகங்கள் உண்மையான மார்பகங்கள் போலவே வெளியே தெரியும் வண்ணம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் வசதிக்காகவே இத்தனகைய டிசைனில் தான் டீ-சர்ட்டுகள் தயாரித்ததாக ஜப்பானிய டிசைனர் கூறியுள்ளார்.

15 வருடமாக டிசைனிங் துறையில் இருந்து வரும் Takayuki Fukuzawa என்பவர்தான் இந்த வித்தியாசமான மார்பக டீசர்ட்டை உருவாக்கியுள்ளார். டீ-சர்ட்டில் மார்பகம் இருக்கும் இடத்தில் பஞ்சு போன்ற மென்மையான பொருளை வைத்து பெரிதாக இருக்குமாறு அவர் செய்துள்ள டிசைன் உண்மையான மார்பகங்கள் போலவே பார்ப்பதற்கு உள்ளதாக அதை வாங்கி உபயோகித்தவர்கள் கூறியுள்ளார்கள். ஜப்பானில் தற்போது இந்த புதிய வகை டீ-சர்ட்டுக்கள் மிக வேகமாக பரவி வருகிறது. விதவிதமான கலர்களில் வெளிவந்துள்ள இந்த டீசர்ட் இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply