அரசின் உள்ளகப் பிரச்சினைகள் தற்போதே வெளி வருகின்றன – விக்ரமபாகு கருணாரத்ன

vickramabahu-karunaratneஅரசின் உள்ளகப் பிரச்சினைகள் தற்போது களத்திற்கு வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார் நவ சமசமாஜக் கட்சியின் செயலாளர் விக்கிரமபாகு கருணாரத்ன. கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர்களான விமல் வீரவன்ஸ மற்றும் பட்டளி சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்கள் அரசைப் பகீரங்கமாகவே விமர்சித்து வருகின்றனர்.

விமல் வீரவன்ஸ, சம்பிக்க, அனுரகுமார திசாநாயக்க ஆகி யோர் மாதுலுவாவே சோபித்த தேரரருடன் பகிரங்கமாகவும், ரகசியமாகவும் பேச்சு நடத்தி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை எவ்வாறு நியமிப் பது என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. ஆனால், அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சு நடத்தியே பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு தகுதி வாய்ந்த வராக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே இருக்கின்றார்.” என்று தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply