சீனாவில் பிரபல சுரங்க தொழிலதிபருக்கு மரண தண்டனை. சீன நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

chinaசீனாவில் சுரங்க தொழிலில் கொடிகட்டி பறந்த பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் அவருடைய சகோதரருக்கு சீன நாட்டு நீதிமன்றம் அதிரடியாக மரண தண்டனை வழங்கியுள்ளது.

தென்மேற்கு சீனாவில் புகழ்பெற்று விளங்கும் சுரங்க நிறுவனமான Sichuan Hanlong Group என்ற நிறுவனத்தின் தலைவர் 48 வயது Liu Han என்பவர் சுரங்க தொழிலை மட்டுமின்றி பல கொலை மற்றும் சட்டவிரோத குற்றங்கள் செய்து மாபியா கூட்டம் ஒன்றிற்கு தலைவர் போல் இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு சீன நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் Liu Han மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை வழங்கி நேற்று சீன நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் மேலும் சம்மந்தப்பட்ட 35 நார்களுக்கு 3 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீன நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக Sichuan Hanlong Group நடத்தி வந்த சுரங்கத்தொழிற்சாலை மூடப்பட்டது. சுரங்க தொழிற்சாலையில் சட்டவிரோத போக்குகளும், பல கொலைகளும் நடந்துள்ளதை ஆதாரத்துடன் நிரூபித்த சீன அரசு வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றது.

Tags: , ,

Leave a Reply