மோடி அழைத்தால் சேர்ந்து வாழத்தயார்: மனைவி ஜசோதா பென்

modi-wifeஅகமதாபாத்: பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி தம்மை அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத்தயார் என்று இளம்வயதிலேயே பிரிந்த அவரது மனைவி ஜசோதா பென் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்கும், யசோதா பென் என்ற பெண்ணுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்ததாகவும், குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டதாகவும், ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

மோடியும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் முதன்முதலாக தனது மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜசோதா பென் குஜராத ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,மோடி நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக மகிழ்கிறேன்.

நானும் அவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. நாங்கள் சேர்ந்து வாழவில்லை அவ்வளவுதான்.அவரைப் பொறுத்தமட்டில், அவரது வாழ்க்கையில் நாடுதான் மிகவும் முக்கியம்.அவர் அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத்தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply