புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நல்லிணக்கத்துக்கு உகந்ததல்ல – ஆஸ்திரேலிய செனட்டர்

australian_flagபுலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடையை நல்லிணக்கத்திற்கு உகந்த செயற்பாடாகக் கருதவில்லை என்று ஆஸ்தி ரேலியா அறிவித்துள்ளது. அத்துடன் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை ஊக்குவிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளரும் செனட்டருமான பிரட்மேசன், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸூக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோதல்களின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பில் வெளிப் படையான மற்றும் சுதந்திர மான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆஸ்திரேலியா இலங்கையைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இலங்கையில், சில வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்தாலும் அந்த அமைப்புகள் ஆஸ்தி ரேலியாவின் சட்டத்திற்கு அமைய செயற்படும் சுதந்திரத்தை நாம் கட்டுப்படுத்தப் போவதில்லை. ஏன் என்றால் எமது நாடு உரிமைகளுக்கான சுதந்திரத்தை வலுவாக ஆதரித்து வருகிறது.

அத்துடன் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் இலக்கு வைக்கப்பட்டதை நல்லிணக்கத்திற்கான உகந்த செயலாக ஆஸ்திரேலியா கருதவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply