யுத்த குற்றவாளிகளை தண்டிக்கும் வகையிலான யோசனை திட்டமொன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிப்பு

usa-flagஇலங்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வகையிலான யோசனைத் திட்டமொன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அடையாளப்படுத்தப்பட்ட நபர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக் கூடாது என தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினை நியமிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியவர்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை, பரக் ஒபாமா நிர்வாகம் நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply