தென் ஆபிரிக்க மத்தியஸ்தத்தை எதிர்க்கின்றோம் என ஜே.என்.பி. கட்சியின் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்விவகாரத்தில் தென் ஆபிரிக்கா தலையீடு செய்வது, உள்நாட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை தேட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்க மத்தியஸ்தத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்த அழுத்தங்களை சமாளிக்க முடியும் என சில தரப்பினர் கருதுவதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தலையீடுகளை விக்னேஸ்வரன் விரும்பினாலும், சர்வதேச தலையீடு அவசியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் ஆபிரிக்க மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்தால் பாரியளவிலான பிரச்சினைகள் ஏற்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















