மோடியின் பதவி ஏற்பிற்கு யாழில் இருந்து செல்லும் லேடி!

yogeswariஇந்தியப் பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்லும் குழுவில் யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா இடம்பெறுகிறார் என புதுடில்லிக்கான சிறீலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார்.

சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் ஜனாதிபதியின் குழு இந்தியா பயணமாகிறது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நாளை மாலை பதவியேற்கிறார். இந்த நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா செல்கிறார்.

இந்த குழுவில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்,யாழ்.மாநகரசபை மேயர் யோகேஸ்வரி ஆகியோரும் இடம்பெறுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை காலை புறப்படும் சிறீலங்கா குழு முற்பகல் 10 மணிக்கு இந்தியாவைச் சென்றடையவுள்ளது.

Tags: ,

Leave a Reply