வாஜ்பாயிடம் ஆசி பெற்ற மோடி … காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை!

modi-vajpayee-600-jpgபிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி, இன்று காலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து ஆசிபெற்றார். தொடர்ந்து ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று நரேந்திரமோடி மரியாதை செலுத்தினார்.

காந்திக்கு மரியாதை

இந்திய நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்பதையொட்டி இன்று காலை ராஜ்காட் சென்ற நரேந்திர மோடி அங்குள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு, மலர் தூவி மரியாதை செலுத்திய நரேந்திர மோடி சிறிது நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். அவர் ராஜ்காட் சென்றதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாஜ்பாய் வீட்டில் மோடி

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்ற பின்னர் குஜராத்பவனுக்கு திரும்பினார்.

Tags: , ,

Leave a Reply