சிறிலங்கா முழுவதும் இனங்காணப்படாது 3000 எச்.ஐ.வி கிருமி பரவியவர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பால் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு இந்த மதிப்பீட்டை மேற்கொண்டு தகவல்களை வெளியிட்டுள்ளது.
எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியவர்களை அடையாளம் காண நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விசேட பிரிவுகள் உருவாக்கபப்ட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இரத்த பரிசோதனை நிலையங்களை முறைமையாக்கி போதிய விழிப்புணர்வுகளை வழங்குவதன் மூலம் நோயாளிகளை கண்டுபிடிக்க முடியும்.
1985ம் ஆண்டு முதல் இதுவரையில் எயிட்ஸ் நோயினால் 310 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற பாலுறவினால் எச்.ஐ.வீ நோய் தொற்று பரவக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
ஆண் பெண் பாலியல் தொழிலாளிகள் இந்த நோயினால் பாதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு போதியளவான விழிப்புணர்வையும் சிகிச்சைகளையும் வழங்குவதன் நோய்த்தொற்று பரவுவதனை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
















