இராணுவப் படைச் சிப்பாய்களுடன் பழகி தகவல்களை திரட்டி வந்த தமிழீழ விடுதலைப் புலி உளவாளி ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஜெயா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்புக்கும் நோக்கில் உளவுத் தகவல்களை திரட்டியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
உளவுத் தகவல்களை திரட்டும் நோக்கில் இராணுவச் சிப்பாய்களுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் உயர் பதவியொன்றை வகித்து வந்த குறித்த நபர், கொழும்பிற்கு அடிக்கடி சென்று படைச்சிப்பாய்களை சந்தித்துள்ளார்.
சந்தேக நபரின் செல்லிடப் பேசியிலிருந்து பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
















