மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்தார் ராஜபக்சே

MahindaSriLankaWarAnniversaryடெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை டெல்லி வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதையடுத்து நரேந்திர மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மோடியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவுக்கு வருவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்தார். இதற்கிடையே இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராஜபக்சே வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே இன்று காலை டெல்லி வந்தார். மிக பலத்த பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags: , ,

Leave a Reply