இரு கட்டிடங்களுக்கிடையே 8 இன்ச் இடைவெளியில் விழுந்த 5 வயது சிறுவன். 6 மணிநேரம் போராடி மீட்பு.

childசீனாவில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த 8 இன்ச் இடைவெளியில் விழுந்த சிறுவனை மீட்புப்படையினர் போராடி உயிருடன் மீட்டனர்.

சீனாவில் உள்ள Guizhou Province’s Bijie City என்ற பகுதியில் இன்று காலை 5 வயது சிறுவன் ஒருவன் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த 8 இன்ச் இடைவெளியில் சுமார் 23 அடி ஆழத்தில் தவறி விழுந்துவிட்டான்.

தகவல் அறிந்தவுடன் விரைந்த மீட்புப்படையினர் விரைந்து வந்தனர். 8 இன்ச் இடைவெளியில் மீட்புப்படையினர் யாரும் உள்ளே போக முடியாத நிலை இருந்ததால் சிறுவன் விழுந்திருந்த இடத்தின் அருகே உள்ள சுவரில் ஓட்டை போட்டு சிறுவனை மிக சாமர்த்தியமாக மீட்டனர். முன்னதாக சிறுவன் மீது இடிக்கப்படும் சுவரின் செங்கல் போன்றவை விழுந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

சிறுவனை மீட்டவுடன் சிறுவனின் தாய் கட்டி பிடித்து கதறியழுத காட்சி காண்போர் நெஞ்சை கரைய வைக்கும்படி இருந்தது. இந்த மீட்பு நடவடிக்கை சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக இணையதளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நமது தேடிப்பார் வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு இணைத்துள்ளோம். சிறுவனை மீட்க மீட்புப்படையினர் சுமார் ஆறுமணி நேரம் போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply