மகிந்த சிந்தனையை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை – முதலமைச்சர்

vigneshwaran2மகிந்த சிந்தனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரவெட்டி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கம் மகிந்த சிந்தனையில் வெற்றிபெற்றிருப்பதாகவும், மாகாண செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கிறது என பல இடங்களில் முதலமைச்சர் கூறியதாக கரவெட்டி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியபோதுமுதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மாகாணசபை இதுவரை செய்தவை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும். எம்மால் செய்யக்கூடியவை அனைத்தையும் நாம் மக்களுக்கு இதுவரை செய்துள்ளோம். அவை தொடாபாக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இதேவேளை மகிந்த சிந்தனையை முன்னெடுக்க வேண்டியஅவசியமும் எமக்கில்லை என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply