இலங்கை செல்கிறார் மோடி – ராஜபக்சே அழைப்பை ஏற்றார்!

modi-rajapakse-600-jpgஇலங்கைக்கு வருமாறு சிங்களத்து ராஜபக்சே விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளாராம். விரைவில் அவர் இலங்கை செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாலர் சுஜாதா சிங் கூறியுள்ளார். இன்று ராஜபக்சே உள்ளிட் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுஜாதா சிங் பேசுகையில்,

சார்க் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்தை பயனுள்ளதாக இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது என நவாஸிடம் மோடி வலியுறுத்தினார்.

இந்தியாவுடனான உறவுவையும், வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்த நவாஸ் உறுதி கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. 13-வது அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தினார். அதிகார பகிர்வுக்கு 13-வது அரசியல் சட்டம் அமலாவது அவசியம் என்றும் விளக்கிக் கூறினார். அனைத்து துறைகளிலும் இலங்கையுடன் ஒத்துழைப்பு தொடரும் என உறுதி கூறினார். இதையடுத்து இலங்கைக்கு வரவேண்டும் என்று ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று மோடி இலங்கைக்கு வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்றார் சிங்.

Tags: , ,

Leave a Reply