யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி யுடன் பெரும் வாக்குவாதம் கூச்சல் குழப்பம்

meetingயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, கூட்டமைப்புக்களுக்கிடையில் பெரும் விவாதங்கள் கூச்சல் குழப்பங்கள் அமளிதுமளிள் ஏற்பட்டது.

மேற்படி கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் ஈ.பி.டி.பி தலைவருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் “கொள்ளையர்கள், மண்டையன்குழு, தறுதலைகள்” ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, கூட்டமைப்பு கஜதீபனின் ஆகியோரிற்கிடையில் வாய்த் தர்க்கங்கள் கடுமையாக இருந்தது.

இதன்போது, மகேஸ்வரி நிதியம் தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, “ஈ.பி.டி.பி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்” என்று ஈ.பி.ஆர்.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச முற்பட, ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, அதனை மறுதலித்து “உங்களின் கொள்ளைகள், கடந்தகால வரலாறு குறிப்பாக, மண்டையன்குழு குறித்து கதைக்க வேண்டி ஏற்படும்” என்று குறிப்பிட மிகவும் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

விவாதத்தின் இடையே ரெலோ சிவாஜிலிங்கமும் ஏதோ பேச முற்பட, அதனையும் மறுதலித்து பேசிய ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, “நாம் உங்களின் அதாவது ரெலோவின் கொள்ளைகள் குறித்தும், அதாவது 1985இல் புலிகள் உங்களை அம்பலப்படுத்திய கொள்ளைகள் குறித்து பேச வேண்டியேற்படும்” எனத் தெரிவிக்க, விவாதத்தின் மையப் பொருளான “கொள்ளையர்கள், மண்டையன்குழு, தறுதலைகள்” போன்றவை உச்சத்தைத் தொட்டது.

அதேபோல் ‘தறுதலை’ என்ற வார்த்தையினை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மாறி மாறி பேசிக் கொண்டனர். இதன்போது, முருகேசு சந்திரகுமாரினால் (ஈ.பி.டி.பி) “தறுதலை ஆசிரியர்கள்” என்ற வசனம் பயன்படுத்தப்பட்டது.

அதன்போது, தறுதலை ஆசிரியர் என்று நீங்கள் யாரைக் கூறுகின்றீர்கள்? என கஜதீபன் கேட்க, ‘உம்மைத் தான் தறுதலை ஆசிரியர் என்று கூறினேன்’ என்று சந்திரகுமார் கூறினார்.

அதற்கு பதிலளித்த கஜதீபன் ‘நான் தறுதலை ஆசிரியர் என்றால் நீர் ஒரு தறுதலை அரசியல்வாதி’ எனக் கூறினார். அதற்கு சந்திரகுமார் ‘ஆமாம் நான் தறுதலை அரசியல்வாதி தான்’ எனக் கூறி முடித்தார். வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், ஓர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவ்வளவு பிரச்சினைகளையும், கன்னத்தில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

Tags: , , ,

Leave a Reply