சமந்தாவின் சாப்பாட்டிற்கு தினசரி ரு.40,000 செலவு. தயாரிப்பாளர்கள் புலம்பல்

samantha-vijayதோல் அலர்ஜியால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தாவுக்கு கோடைக்காலம் வந்துவிட்டாலே பயம்தாம். மீண்டும் தோல் அலர்ஜி தாக்கிவிடும் என்பதற்காக மிகவும் ஜாக்கிரதையாக இருக்கின்றாராம்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி சூரிய ஒளி தோல் மீது படாமலும், அதிக வெளிச்சம் இல்லாத இடத்திலும் இருந்து தன்னை தோல் நோயில் இருந்து காத்து வருகிறார். மெலும் டாக்டர்கள் அவருடைய உணவு முறையையும் மாற்றி அமைக்க ஆலோசனை தெரிவித்துள்ளனர். அவருக்காக ஸ்பெஷலாக சமையல் செய்ய இரண்டு சமையல் கலைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தலைமை சமையல்காரர்களாக பணிபுரிந்தவர்கள். அவர்கள் இருவருக்கு சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.35000 சம்பளமாம்.

சமந்தாவின் உணவு வகைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5000 மளிகை பொருட்களும், ரூ.35,000 சம்பளமும் சேர்த்து ரூ.40,000 மொத்தம் செலவாகிறது. இந்த செலவு முழுவதும் தயாரிப்பாளர் தலையில்தான் விழுவதாக கூறப்படுகிறது. தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சமந்தாவுக்கு அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தினசரி நாற்பதாயிரம் அவருக்கு உணவுக்காக மட்டும் செலவழித்து வருகின்றனர்.

சமந்தாவிற்கு தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் வேறு வழியின்றி இந்த தொகையை செலவழித்து வருவதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றானர்

Tags: , ,

Leave a Reply