இ-சிகரெட்டினால் ஏற்பட்ட தீ விபத்து. இங்கிலாந்து தாய் மற்றும் 2 மகன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

fire-accidentஇங்கிலாந்து நாட்டில் இ-சிகரெட் ஒன்றினால் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஒரு வீட்டில் படுக்கையறையே எரிந்து சாம்பலானது. அந்த வீட்டில் இருந்த ஒரு தாயும் அவருடைய இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Birmingham நகரில் Keeley Cooper என்ற 22 வயது பெண் தனது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். இவருகு இ-சிகரெட் புகைக்கும் பழக்கம் உண்டு. வழக்கம்போலவே இரவு படுக்க போகும் முன்னர் தனது இ-சிகரெட்டை சார்ஜில் வைத்துவிட்டு தனது இரண்டு மகன்களுடன் தூங்கிவிட்டார்.

நள்ளிரவில் திடீரென எழுந்து பார்த்த Keeley Cooper, தனது படுக்கை எரிந்து கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டார். இ-சிகரெட் சார்ஜில் இருந்து வெளியான தீப்பொறியால் தனது படுக்கை எரிவதை பார்த்த அவர் உடனடியாக தனது இரண்டு மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எந்தவித காயமும் இல்லாமல் Keeley Cooper மற்றும் அவருடைய இரண்டு மகன்களும் தப்பியபோதிலும், அவருடைய படுக்கையறை முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. இ-சிகரெட்டில் உள்ள லித்தியம் பேட்டரி இதுபோன்ற தீவிபத்தை அடிக்கடி ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply