ஜி.வி.பிரகாஷுக்கு நயன் தாரா கொடுத்த முக்கிய கடிதம். கோலிவுட்டில் பரபரப்பு..

nayantaraபிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நடிகை நயன்தாரா கொடுத்த கடிதம் குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதோடு கதாநாயகனாகவும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். திவ்யாஸ்ரீயுடன் இவர் நடித்த பென்சில் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய முயன்றபோது, சம்மந்தப்பட்ட த்ரிஷா மற்றும் நயன்தாராவிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கிவந்தால் மட்டுமே படத்தின் தலைப்பை பதிவு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர்.

எனவே த்ரிஷாவிடமும், நயன்தாராவிடமும் பேசி அனுமதி வாங்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷே ஏற்றுக்கொண்டார். முதல்கட்டமாக நயன்தாராவிடம் பேசி அவரிடம் அனுமதி வாங்கியதோடு தடையில்லா கடிதமும் பெற்றுவிட்டார். அடுத்ததாக த்ரிஷாவிடம் அவர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி மற்றும் ஸ்ருஷ்டி ஆகிய இரண்டு நடிகைகளும் நடிக்கின்றனர்.

Tags: , ,

Leave a Reply