முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்களும் விசாரிக்கப்படல் வேண்டும்!!

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் ஆளு­ந­ரின் கவ­னம் திரும்­பி­யுள்­ளது.
வட­ப­குதி மக்­க­ளின் பெரும் எதிர்­பார்ப்­புக்கு மத்­தி­யில் நீண்ட இழு­ப­றி­யின் பின்­னர் அமைக்­கப்­பட்ட வடக்கு மாகா­ண­சபை அந்த மக்­க­ளின் எதிர்­பார்ப்­பில் கடு­க­ள­வை­யே­னும் நிறை­வேற்­றிக் கொடுக்­க­வில்லை. மாறாக பெரும் நிதியை விர­யம் செய்­கின்­ற­தொரு நிறு­வ­னம் போன்றே செயற்­பட்டு வரு­கின்­றது.

பெரும் நிதிச் செல­வில் இயங்­கும் மாகாண சபை­க­ளது செயற்­பாடு
பெறு­ம­தி­யற்­ற­வையே

பொது­வாக மாகாண சபை­களை வௌ்ளை யானை­க­ளுக்கு ஒப்­பிட்­டுக் கூறு­வார்­கள்.வடக்கு மாகா­ண­சபை அதை­விட ஒரு­படி மேலா­னது எனக் கூறு­வ­தில் தவ­றொன்­று­மில்லை. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­கள், நிர்­வா­கச் செல­வு­கள் மற்­றும் ஏனைய செல­வி­னங்­க­ளுக்­காக ஆண்­டு­தோ­றும் பல மில்­லி­யன் ரூபா நிதி செல­வி­டப்­ப­டு­கின்­றது. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களுக்­கும் வரி­வி­லக்­க­ளிக்­கப்­பட்ட தீர்­வை­யற்ற வாகன இறக்­கு­ம­திக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டன.

இதன் மூல­மாக அவர்­கள் இலட்­சக்­க­ணக்­கில் பணம் சம்­பா­தித்­துள்­ள­னர். கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய வாகன இறக்­கு­ம­திக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டமை போன்று தமக்­கும் வழங்­கப்­பட வேண்­டு­மென அடம்­பி­டித்த மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளும் இங்கு இருக்­கத்­தான் செய்­கின்­ற­னர். இவர்­களை நினைத்­துச் சிரிப்­பதா? அல்­லது அழு­வதா? என்­பது தெரி­ய­வில்லை. மக்­கள் எப்­பா­டு­பட்­டா­லும் எமக்­குப் பணம் தான் முக்­கி­ய­மென நினைக்­கின்ற இத்­த­கை­ய­வர்­கள் பொதுச்­சே­வைக்­கெ­னப் புறப்­பட்­டமை மிகக் கேவ­ல­மா­ன­தொரு செய­லா­கும்.

முன்­னாள் மாகாண அமைச்­சர்­கள் ஊழல் மோசடி மற்­றும் தவ­றான செயல்­க­ளில் ஈடு­பட்­ட­தா­கக் கூறி முத­ல­மைச்­ச­ரால் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர். இதற்­கென விசா­ர­ணைக் குழு­வொன்று அமைக்­கப்­பட்டு அதன் அறிக்­கை­யும் முத­ல­மைச்­ச­ரால் பெறப்­பட்­டது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே அமைச்­சர்­கள் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­தாக முத­ல­மைச்­ச­ரின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்த அறிக்­கை­யி­லுள்ள விப­ரங்­க­ளைப் பொது­மக்­க­ளால் அறிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.

அதிர்ச்­சி­ த­ரும் வடக்கு மாகா­ண­சபை அமைச்­சர்­கள் மீதான
ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள்

ஆரம்­பத்­தில் குறிப்­பிட்ட ஓர் அமைச்­சர் மீதே ஊழல் குற்­றச்­சாட்­டுக்­கள் மாகாண சபை­யில் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் முத­ல­மைச்­சர் தன்­னிச்­சை­யான முடிவை மேற்­கொண்டு, ஏனைய அமைச்­சர்­க­ளை­யும் விசா­ரிக்க வேண்­டு­மெ­னக் கூறி அதன் பொறுப்பை விசா­ர­ணைக் குழு­வி­டம் ஒப்­ப­டைத்­தார்.

இதன் பின்­னர் மாகா­ண­ச­பை­யில் இடம்­பெற்ற அரு­வ­ருக்­கத்­தக்க செயல்­களை அனை­வ­ரும் அறி­வார்­கள். பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட அமைச்­ச­ரொ­ரு­வர் தாம் முத­ல­மைச்­ச­ரால் தவ­றான முறை­யில் நடத்­தப்­பட்­ட­தா­கக் கூறி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரு­கின்ற அள­வுக்கு நிலைமை எல்லை மீறிக் காணப்­பட்­டது. ஏனைய இரண்டு அமைச்­சர்­க­ளும் கூட, தாம் அநி­யா­ய­மான வகை­யில் முத­ல­மைச்­ச­ரால் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­தா­கக் கூறி­னார்­கள்.

இதில் வேடிக்கை என்­ன­வென்­றால், ஆரம்­பத்­தில் ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்­கொண்டு தமது பத­வி­யைத் துறந்த முன்­னாள் அமைச்­சர், தற்­போது முதல­மைச்­ச­ரின் தீவிர விசு­வா­சி­யாக வலம்­வந்து கொண்­டி­ருக்­கி­றார். இவ­ரைக் காப்­பாற்­றும் பொருட்டே முத­ல­மைச்­சர் அமைச்­சர்­க­ளின் ஊழல் மோசடி தொடர்­பாக மேற்­கொண்­டும் நட­வ­டிக்கை எது­வும் மேற்­கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்­டும் எழா­ம­லில்லை.

ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான விசா­ரணை
குறித்து அக்­கறை காட்­டும் வடக்கு ஆளு­நர்

தற்­போது முத­ல­மைச்­சர் செய்­யத்­த­வ­றிய ஒன்றை ஆளு­நர் தமது கையி­லெ­டுத்­துள்­ளார். இது முத­ல­மைச்­சர் மீது ஆளு­நர் கொண்­டி­ருக்­கும் அவ­நம்­பிக்­கையை வௌிப்­ப­டுத்தி நிற்­கின்­றது.

ஆளு­நர் இந்த விட­யத்­தில் எவ்­வித பார­பட்­ச­மு­மின்­றிச் செயற்­பட வேண்­டும். முன்­னாள் அமைச்­சர்­கள், தற்­போது பத­வி­வ­கிக்­கின்ற அமைச்­சர்­கள் மட்­டு­மல்­லாது முத­ல­மைச்­ச­ரின் கீழ் உள்ள அமைச்­சுக்­கள் மீதும் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டல் வேண்­டும். அப்­போ­து­தான் சகல உண்­மை­க­ளை­யும் வௌிக்­கொ­ணர முடி­யும்.

எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதத்­து­டன் வடக்கு மாகாண சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்­ள­தால், அதற்கு முன்­னர் விசா­ர­ணை­கள் இடம்­பெற்று அவை தொடர்­பான மேல் நட­வ­டிக்­கை­கள் பூர்த்­தி­யாக்­கப்­ப­டல் வேண்­டும்.

போரி­னால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட வட­ப­குதி மக்­க­ளைப் பற்­றிச் சிறி­தும் சிந்­திக்­காது, மாகாண அமைச்­சர்­க­ளும், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளும் நடந்து கொள்­கின்­றமை எந்த வகை­யி­லும் ஏற்­க­மு­டி­யா­த­தொன்று. சில மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மீதும் மக்­கள் அதி­ருப்தி கொண்­டுள்­ள­னர். இவர்­கள் பத­விக்கு வந்­த­பின்­னர் தத்தம் பொரு­ளா­தார நிலை­யில் மேம்­பட்­டுள்­ள­தா­க­வும் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுந்­துள்­ளன. ஆகவே இவர்­க­ளும் விசா­ரிக்­கப்­பட்டு உண்­மை­நிலை கண்­ட­றி­யப்­ப­டல் வேண்­டும்.

வடக்கு மாகாண சபை மீதுள்ள களங்­கம் துடைக்­கப்­ப­டு­ வ­தற்கு உண்­மை­யான விசா­ர­ணை­கள் உத­வு­மென்­பது நிச்­ச­ய­மா­ன­தொன்று.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!