பெயிண்ட் அடித்தவருக்கு $4000 அபராதம் ஏன்? ஃபேஸ்புக் செய்த அதிரடி

paintingஏணியில் நின்று பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த ஒருவருக்கு $4000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருடைய அபராதத்திற்கு காரணம் அவர் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்ததை ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததே ஆகும் என்பதுதான் ஆச்சரியமான தகவல்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த George Nicholls என்பவர் தன்னுடைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு பெயிண்ட் அடிக்க விரும்பினார். அதற்கான ஒப்பந்ததை 25 வயதுள்ள ஒரு பெயிண்டரிடம் கொடுத்திருந்தார். அந்த பெயிண்டர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன்பு ஒருவேனை நிறுத்தி அந்த வேன் உடன் இணைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறி பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பரபரப்பான பிசியான சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வேன் மீது அவர் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்ததை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர். ஒருசிலர் வேன் மீது ஏணி வைத்து பெயிண்ட் அடித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பெயிண்டர் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பெயிண்ட் அடித்துக்கொண்டே இருந்தார்.

இந்நிலையில் ஒருவர் பெயிண்டரை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். அதை HSE என்ற (Health Survey for England) இன்ஸ்பெக்டர் Frank Flannery என்பவருக்கும் டேக் செய்தார். அடுத்த அரைமணி நேரத்தில் அந்த பெயிண்டர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்பின்றி ஏணியை பயன்படுத்தி பெயிண்ட் அடித்த குற்றத்திற்காக அவருக்கு $4000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் பயன்படுத்தி வந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. ஃபேஸ்புக்கில் பதிவு செய்த ஒரே ஒரு புகைப்படத்தால் அரை மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply